Site Logo

அறகலிய போராட்டம் 12, பேருக்கு மரண தண்டனை..!

Views: 127

அறகலிய போராட்டம் 12, பேருக்கு மரண தண்டனை..!

அறகலிய போராட்டம் 12, பேருக்கு மரண தண்டனை..!

அமரகீர்த்தி அத்துகோரல எம்.பி கொலை வழக்கு இன்று (11/02/2026) கொழும்பு நீதிமன்றில் தீர்ப்பு. 12 பேருக்கு மரண தண்டனை, 4 பேருக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாத சிறை, ஏனையோர் விடுதலை.


கடந்த ‘அரகலய’ போராட்ட காலத்தின் போது, 2022 மே 9 ஆம் திகதி நிட்டம்புவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் காரணமாக அப்போதைய பாராளுமன்ற உறுப்பினரான அமரகீர்த்தி அத்துகோரள உயிரிழந்தார்.


இச்சம்பவத்தில் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தரும் உயிரிழந்ததுடன், இக்கொலைகள் தொடர்பில் பல சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.


குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் 42 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் கம்பஹா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.


பின்னர், 2023 ஆம் ஆண்டு ஜூலை 28 ஆம் திகதி, இச்சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 37 சந்தேக நபர்கள் கடுமையான பிணை நிபந்தனைகளின் அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.