யாழில் ஏக்கியராஜ்ய அரசியலமைப்பை நிராகரிக்கும் அரசியல் நிலைப்பாட்டையும், தமிழ்த்தேசம், இறைமை, சுயநிர்ணயம் ஆகிய அடிப்படை உரிமைகளை அங்கீகரிக்கும் தீர்வை வலியுறுத்தும் நோக்கிலும் கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது நேற்று(15) தமிழ்த் தேசிய பேரவை ஏற்பாட்டில் யாழ்ப்பாணம், சட்டநாதர் கோவில் வீதியில் அமைந்துள்ள இளங்கலைஞர் மன்றத்தில் நடைபெற்றது.

இதன்போது, கலந்துரையாடலில் ஏக்கியராஜ்ய அரசியலமைப்பு வரைவை முழுமையாக நிராகரித்தல், தமிழ்த்தேசம் என்ற அரசியல் அடையாளத்தை அங்கீகரித்தல், ஈழத்தமிழர்களின் இறைமை உரிமை மற்றும் சுயநிர்ணய உரிமை என்பவற்றை அரசியல் தீர்வின் அடிப்படையாக வலியுறுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.
அத்தோடு, திம்புகோட்பாட்டை மீண்டும் அரசியல் உரையாடலின் மையமாக கொண்டு வருதல், இத்தீர்மானங்களை மக்கள் மயப்படுத்தும் வகையில் சமுக மட்ட செயல்பாடுகளை முன்னெடுத்தல் போன்ற விடயங்களும் ஆராயப்பட்டது.

திம்புகோட்பாடு ஈழத்தமிழர்களின் இறைமை இதுவே எமது அரசியல் கோரிக்கை என்ற நிலைப்பாடு, இக் கூட்டத்தில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
கலந்துரையாடலில் அரசியல் சமரசங்களின் வழியே உரிமைகள் சுருங்கிக்கொண்டே போகும் சூழலில், தமிழர் அரசியல் உரிமைகளை அடிப்படைக் கோட்பாட்டின் மேல் மீண்டும் நிலைநிறுத்தும் முயற்சியாக மதிப்பிடப்படுகிறது

இந்தக் கூட்டத்தில், மதகுருமார்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்.



.jpg)
