Site Logo

ஏ.ஐ. மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி இந்தியா பயணம்!

Views: 28

ஏ.ஐ. மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி இந்தியா பயணம்!

ஏ.ஐ. மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி இந்தியா பயணம்!

இந்தியா AI Impact Summit 2026 மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கே இன்று (17) இந்தியா புறப்படுகிறார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பின் பிரகாரம் இலங்கை ஜனாதிபதியின் பயணம் அமைந்துள்ளது.

பிரதமர் மோடியின் தலைமையில் நடைபெறும் இந்த மாநாடு, மனிதகுல நலனுக்காக செயற்கை நுண்ணறிவை பொறுப்புடன் மேம்படுத்தி பயன்படுத்துவதை ஊக்குவிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தகவலின்படி, ஜனாதிபதி திஸாநாயக்கே பிப்ரவரி 19ஆம் தேதி மாநாட்டில் உரையாற்றவுள்ளார். ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் 20 நாடுகளின் தலைவர்கள் மற்றும் 45க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் எதிர்கால திசை மற்றும் உலகளாவிய சவால்களை சமாளிக்கும் அதன் திறன் குறித்து முக்கியமான கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளன.

இந்த பயணத்தின் போது, ஜனாதிபதி மோடி மற்றும் பிற சர்வதேச தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இருநாட்டு உறவுகள் வலுப்பெறுவதுடன், கூட்டாண்மை வாய்ப்புகளும் ஆராயப்படும்.