முதுமாணி இயந்திர பொறியியலாளர் ஸதீபாவுக்கு யஹியாகான் வாழ்த்து..!
மூதூரின் Mechanical Engineer) ஸதீபா முஸ்னா முகம்மட் முனாஸூக்கு – முஸ்லிம் காங்கிரஸ் பிரதிப் பொருளாளர் ஏ.சி.யஹியாகான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்டத்திலேயே முதலாவது முதுமாணி கற்கை நெறியைப் பூர்த்தி செய்த முதல் முஸ்லிம் பெண் பொறியியலாளர் எனும் பெருமையை பெற்று, தனது சொந்த பிரதேசமான மூதூர் மண்ணுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்.
மர்ஹூம் எஸ்.எம். மக்கீனின் (கல்வி அதிகாரி SLEAS) பேத்தியும் எம்.சி.எம். முனாஸ், சுஸானா முனாஸ் ஆகியோரின் புதல்வியும் பொறியியலாளர் எம்.எம்.இர்தீஸின் (SLES) சகோதரியுமாவார்.
29 ஆவது வயதில் முதுமாணி கற்கையை நிறைவு செய்த முனாஸ் ஸதீபா முஸ்னாவுக்கு அவர்களுக்கு எனதும் எனது குடும்பத்தினரதும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.